களுத்துறையில் பேருந்து சாரதிகள் மீது அதிரடி சோதனை – 8 சாரதிகள் சிக்கினர்

 


பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவையில் ஈடுபட்டிருந்தபோது போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தப்பட்ட 8 பேருந்து சாரதிகள் மற்றும் ஒருவரான நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று (19) களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளும் தேசிய போக்குவரத்து மருத்துவ அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன் போது, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் பணியில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் 9 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 35 முதல் 57 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் பயாகல, யட்டியன, தொடம்கொட, தெபுவன, மீகஹதென்ன மற்றும் களுத்துறை தெற்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.