புங்குடுதீவு கடற்கரையில் மீனவரின் சடலம் கரையொதுங்கியது.

 

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் இன்று (27) சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் குருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவருடையதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் கடந்த 25ஆம் திகதி கடற்தொழிலுக்காக சென்றிருந்த நிலையில் பின்னர் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மீனவர் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இன்று அவரது சடலம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

சம்பவ இடத்தில் உறவினர் ஒருவர் சடலத்தை அடையாளம் காட்டியதையடுத்து, சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.