ஹஜ் பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இப்ராஹீம் நபி அவர்கள் வெளிப்படுத்திய அளப்பரிய இறைபக்தி மற்றும் உன்னத தியாகத்தை நினைவுகூரும் ஆழமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக ஹஜ் பெருநாள் அமைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்குப் மிகவும் மதிப்புமிக்கவற்றையும் மனிதகுல நலனுக்காகவும் இறைவனின் விருப்பத்திற்காகவும் அர்ப்பணிக்கும் மனப்பான்மையை இந்தப் புனித நாள் உலகிற்கு எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூகத்தில் நிலவும் வேறுபாடுகளை கடந்து, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் சகவாழ்வை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஹஜ் பெருநாள் வலியுறுத்துவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தியாகமும் கருணையும் மையமாகக் கொண்ட இந்தப் பெருநாளின் செய்தி, அமைதியானதும் சுபீட்சமானதுமான இலங்கையை உருவாக்கும் பயணத்திற்கு சிறந்த வழிகாட்டியாக அமைகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், குறுகிய மனப்பான்மைகளை தவிர்த்து, மற்றவர்களை கௌரவிக்கும் பண்பையும் கருணையையும் வளர்த்தெடுத்து, அமைதி மற்றும் ஒற்றுமை நிலவும் சமூகத்தை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஹஜ் பெருநாள் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி, அமைதி, சுபீட்சம் மற்றும் ஆசீர்வாதங்களை வழங்கும் புனித நாளாக அமைய வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
.jpeg)