பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினராக அடையாளம் காணப்பட்ட ‘எல்டோ தர்மே’ என்பவர் டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘எல்டோ தர்மே’ மீது சர்வதேச காவல் அமைப்பு (Interpol) மூலம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், பல நாடுகளில் நடைபெறும் பாரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த கைது நடவடிக்கை சர்வதேச ஒத்துழைப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.