இலங்கையின் 5 & 6ஆம் IMF மதிப்பாய்வுகள் நிறைவு.

 

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி (EFF) திட்டத்தின் கீழ், 5ஆம் மற்றும் 6ஆம் மதிப்பாய்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மதிப்பாய்வுகளை ஆராய்வதற்காக IMF செயற்குழு நேற்று (27) கூடினர். இதன்போது, இலங்கையின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முன்னேற்றங்கள் திருப்திகரமாக உள்ளதாகக் கருதப்பட்டதன் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இலங்கைக்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி இம்மாதத்திற்குள் விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி, நாட்டின் பொருளாதார மீட்பு திட்டங்கள், நிதி நிலைத்தன்மை மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.