எஹலியகொட, வலவிட்டவத்த பகுதியில் இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கெட்டஹெத்த பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின் படி, மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்று குறித்த நபரை தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக Eheliyagoda Police மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
