இச்சம்பவம் நேற்று இரவு 11.53 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள் பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த சந்தேகநபர்கள் 17 மற்றும் 19 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களில் ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட Donald Trump, இது மிகவும் ஆபத்தான மற்றும் கவலைக்கிடமான நிலைமை என தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
.jpeg)