கொள்ளுப்பிட்டியில் இரவு விடுதியில் சூதாட்டம்: 6 வெளிநாட்டவர்கள் கைது.



 கொள்ளுப்பிட்டி காலி வீதியில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட பொலிஸ் சுற்றிவளைப்பில், உரிமமின்றி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று இரவு (27) மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 27 முதல் 48 வயதுக்கிடைப்பட்ட சீனப் பிரஜைகள் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்துடன் தொடர்புடைய இடத்தில் உரிமமின்றி சூதாட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுவதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.