சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தையும் செழிப்பையும் அளவிடும் முக்கிய குறியீடாக வண்ணத்துப்பூச்சிகள் விளங்குகின்றன என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த பூங்கா வெறும் பொழுதுபோக்கு இடமாக மட்டுமன்றி, சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களுக்கான ஆய்வு மையமாகவும், பொதுமக்களுக்கு மன அமைதியை வழங்கும் இயற்கை தளமாகவும், சிறுவர்களுக்கான கல்வி சார்ந்த பொழுதுபோக்கு மையமாகவும் செயல்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்கும் வகையிலும் அவற்றின் இயற்கை இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் 60-க்கும் மேற்பட்ட அரிய வகை தாவரங்கள் இப் பூங்காவில் நாட்டப்பட்டுள்ளன.
பூங்காவுக்கு வருகை தருபவர்கள் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி மற்றும் அவற்றின் வகைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் நவீன தகவல் மையம் (Information Centre) அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
.jpeg)