வெசாக் பண்டிகை: நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடல் அறிவிப்பு.



 எதிர்வரும் வெசாக் பூரணைத் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட வேண்டும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.ஜி.எஸ். பேமரத்ன அறிவித்துள்ளார்.

அதன்படி, 2026 மே 29ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படும் நேரத்திலிருந்து 2026 ஜூன் 1ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் நேரம் வரை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகையின் மத ஒழுக்கம் மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.