இந்த சம்பவம் இன்று (27) பிற்பகல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. தீப்பரவலின் போது வெளியான நச்சுப் புகையால் விடுதி அறையில் தங்கியிருந்த இரு சிறுவர்களும் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப கட்டத்தில் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவலின்படி, சிறுவர்களின் தாய் தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தாயை பார்வையிடுவதற்காக பதுளையில் இருந்து தந்தையுடன் இரு சிறுவர்களும் மட்டக்களப்பிற்கு வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் சிறுவர்கள் விடுதி அறையில் தங்கியிருந்த நிலையில், தந்தை வெளியே சென்றிருந்த சந்தர்ப்பத்தில் தீப்பரவல் ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 3 வயதுடைய ஆண் குழந்தையும், 5 வயதுடைய பெண் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.