இந்த விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு திருப்பெருந்துறை 04ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் விமானப்படை முகாமிற்கு அருகிலுள்ள வீதியில் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திச் சென்றபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதாகவும், பின்னர் அருகிலிருந்த வாவிக்குள் வீழ்ந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனால், இளைஞர் நீரில் மூழ்கிய நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த விமானப்படையினரும் பொதுமக்களும் இணைந்து அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
