இன்று இரவு முதல் கம்பஹா – மஹர பகுதிகளில் நீர் விநியோகம் தடை.

 


கம்பஹா மற்றும் மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (27) 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று இரவு 7.00 மணி முதல் நாளை (28) முற்பகல் 7.00 மணி வரை குறித்த பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய நீர்க்குழாய்களை இடமாற்றம் செய்யும் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.