மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 4 இந்திய மீனவர்கள் கைது....... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 4 இந்திய மீனவர்கள் கைது.......




இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைதான மீனவர்கள் இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் ஆரம்பமாகவிருந்த சில மணித்தியாலங்களுக்கு முன்பாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய படகும் இலங்கை கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.