இலங்கை பாதுகாப்பில் இருந்த ஈரான் கடற்படை மாலுமிகள் தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பு..........




இலங்கையின் பாதுகாப்பில் இருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 மாலுமிகள் இன்று (14) தாய்நாடு ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் அமெரிக்க தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், மேலும் ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த 204 மாலுமிகளும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த மாலுமிகள் குழு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட துருக்கி விமானம் மூலம் ஈரான் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.