பிற்பகல் மழை எச்சரிக்கை – சில இடங்களில் பலத்த மழை வாய்ப்பு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பிற்பகல் மழை எச்சரிக்கை – சில இடங்களில் பலத்த மழை வாய்ப்பு




மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அதேபோல் காலி, மாத்தறை, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலை காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதால், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனுடன், சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலப்பகுதியில், இன்றைய தினம் இலங்கையின் சில பகுதிகளுக்கு நேராக சூரியன் உச்சத்தில் நிலவவுள்ளது.

அதன்படி, இன்று நண்பகல் 12:10 மணியளவில் பண்டத்தரிப்பு, தெல்லிப்பழை, வருத்தலைவிளான், வசவிளான் மற்றும் மணற்காடு பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.