விஜய் சமர்ப்பித்த வேட்புமனு தொடர்பாக, பிரமாணப் பத்திரத்தில் வழங்கப்பட்ட வழக்கு விவரங்களில் முரண்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளார்.
அதில், பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவில் தமக்கு குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும், பின்னர் ஒரு பழைய வழக்கு இருப்பது குறித்து தகவல் கிடைத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கட்சியினர் விளக்கமளிக்கையில், பிரமாணப் பத்திரத்தில் தேவையான திருத்தங்களைச் செய்யவும், கூடுதல் தகவல்களைச் சேர்க்கவும் இன்னும் கால அவகாசம் உள்ளதால் இது பெரும் பிரச்சினையாக அமையாது என கூறியுள்ளனர்.
இதேவேளை, பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வழக்கு விவரம் குறிப்பிடப்படாததால் அது நிராகரிக்கப்படும் என சில ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. ஆனால், நடைமுறையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும் வாய்ப்பு இல்லை என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
