நுவான் துஷாரா: IPL தடையில்லா சான்றிதழைத் தேடி நீதிமன்றம் வரை.... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

நுவான் துஷாரா: IPL தடையில்லா சான்றிதழைத் தேடி நீதிமன்றம் வரை....




ஐபிஎல் தொடரின் ஆரம்பம் (2008) கிரிக்கெட் உலகிற்கு புதுமையான மாற்றங்களை கொண்டு வந்தது. முன்னதாக பலருக்கான கனவு, தேசிய அணியில் இடம் பிடிப்பதாக இருந்தது. ஆனால், ஐபிஎல் தொடரின் அதிக புகழ், வருவாய் மற்றும் போட்டித் தரம் காரணமாக, பல நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தேசிய அணியில் விளையாடுவதை விட இந்த தனியார் லீக் தொடரில் ஆடுவதை முக்கியமாகக் கருதுகின்றனர்.

இந்நிலையில், இலங்கை அணியின் நட்சத்திர வீரர் நுவான் துஷாரா, கடந்த ஆண்டு பெங்களூரு அணியால் ரூ.1.6 கோடிக்கு ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலிங்கா பாணியில் பந்துவீசும் இவர், கடைசி ஓவர்களில் யார்க்கர் பந்துகளைச் சிறப்பாக வீசுவதில் திறமை வாய்ந்தவர். கடந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடிய போதும், பெங்களூரு அணி இந்த ஆண்டும் அவரை அணியில் வைத்துள்ளது.

ஆனால், இந்நிலையில் நுவான் துஷாராக்கு IPL தொடரில் பங்கேற்க தேவையான “No Objection Certificate (NOC)” இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் இன்னும் வழங்கப்படவில்லை. இதனைச் சந்தித்து, அவர் இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடரி, உடனடியாக NOC வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.

மேலும், அவரது ஒப்பந்தம் மார்ச் 31-ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலக விரும்பியதால், இலங்கை அணி நிர்வாகம் NOC வழங்க மறுத்துள்ளதாகவும் நுவான் துஷாரா நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால், தடையில்லா சான்றிதழ் இல்லாவிடில் அவருக்கு பெரும் நிதி இழப்பு மற்றும் கிரிக்கெட் வாய்ப்புகளுக்கான இழப்பு ஏற்படும் என்றும் அவர் வாதிடுகிறார்.

ஐபிஎல் தொடரின் முக்கியத்துவம், மார்க்கெட் மதிப்பு மற்றும் போட்டித் தரம் காரணமாக, “தனிப்பட்ட அணிகளில் விளையாடுவது தேசிய அணியை விட முதன்மை” என்ற நடைமுறை நுவான் துஷாராவின் வழக்கில் மீண்டும் வியாபகமாக வெளிப்பட்டுள்ளது.