30 ஆண்டுகளுக்கு பின் லெபனான்–இஸ்ரேல் நேரடி பேச்சுவார்த்தை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

30 ஆண்டுகளுக்கு பின் லெபனான்–இஸ்ரேல் நேரடி பேச்சுவார்த்தை




மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் தங்களது முதலாவது இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.

இந்த முக்கியமான பேச்சுவார்த்தைகள் நேற்று (14) வொஷிங்டன் டி.சி. நகரில் நடைபெற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட காலமாக பதற்றமான உறவில் இருந்து வந்த இந்த இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்றுள்ள இந்த நேரடி பேச்சுவார்த்தை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த சந்திப்பு இரு நாடுகளுக்குமிடையே நீண்டகாலமாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகளை தீர்க்கும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகின்றது.