அமெரிக்க பயணத்தின் போது எப்ஸ்டீன் தொடர்புடையவர்களை சந்திக்கமாட்டார்கள் – மன்னர், ராணி முடிவு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

அமெரிக்க பயணத்தின் போது எப்ஸ்டீன் தொடர்புடையவர்களை சந்திக்கமாட்டார்கள் – மன்னர், ராணி முடிவு




இந்த மாத இறுதியில் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படவுள்ள அரசுமுறைப் பயணத்தின் போது, பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்புடையவர்களை மன்னரும் ராணியும் சந்திக்கமாட்டார்கள் என்று பெக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க பயணம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்பட்ட நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 27 முதல் 30 வரை நடைபெறவுள்ள இந்தப் பயணத்தின் போது, குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகப் போராடும் அமைப்புகளின் பிரதிநிதிகளை ராணி கமீலா சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஈரான் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களால் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடையே சுமுகமற்ற உறவு நிலவி வரும் சூழலில், மன்னரின் இந்தப் பயணம் முக்கியமான இராஜதந்திர நிகழ்வாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, பல ஜனாதிபதிகளும் மன்னர்களும் மாறியிருந்தாலும் நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் பிரித்தானியா – அமெரிக்கா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதில் மன்னர் முக்கிய பங்காற்ற முடியும் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்ச்சைக்குரிய பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் அமெரிக்க ஜனாதிபதிக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.