நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ.க்கு அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அதேபோல் காலி, மாத்தறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதால், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனுடன், சூரியன் வடதிசை நோக்கி நகரும் நிலையில், நாளை (15) வரை இலங்கையின் சில அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க, இன்று நண்பகல் 12.10 மணியளவில் நாவலடி, பரந்தன், முரசுமோட்டை, வெள்ளிக்கண்டல், உடபத்துக்கண்டல் மற்றும் புளியம்பொக்கணை பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.