அமெரிக்க கடவுச்சீட்டில் டொனால்ட் ட்ரம்ப் உருவம் – 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய தீர்மானம்

 



அமெரிக்கா கடவுச்சீட்டுகளில் டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் உருவத்தை உள்ளடக்குவதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மாற்றம், அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வெளியிடப்படவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட பதிப்பு (Limited Edition) கடவுச்சீட்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனநாயக ஆட்சி முறையைக் கொண்ட நாடுகளில், பதவியில் இருக்கும் ஒரு தலைவரின் உருவம் கடவுச்சீட்டில் அச்சிடப்படுவது மிகவும் அரிதான நிகழ்வாக கருதப்படுகிறது. இதனால், இந்த நடவடிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக அமையும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.