ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கும் அனைத்து பொதுச் சேவைகளும் இன்று (17) செயல்படாது என டிஜிட்டல் அமைச்சு அறிவித்துள்ளது.
கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கோளாறை சரிசெய்து சேவைகளை மீண்டும் வழமைக்குக் கொண்டு வர தேவையான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஆட்பதிவுத் திணைக்களம் பிரதான அலுவலகம் மட்டுமன்றி, அனைத்து மாகாண அலுவலகங்களிலும் வழங்கப்படும் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று இயங்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்க, சேவைகள் மீண்டும் வழமைக்கு வரும் வரை அலுவலகங்களுக்கு வருகை தராமல் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
