மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் இன்று (17) இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல் மூலம் 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் நாட்டிற்குக் கொண்டு வரப்படவுள்ளதாக அதன் முகாமை பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா விலிருந்து இலங்கைக்கு வரவுள்ள மற்றுமொரு எரிபொருள் கப்பல் நேற்று (16) இலங்கையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியிலும், நாட்டின் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
