சீனாவில் நடைபெற்று வரும் 6-ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில், மற்போர் (Wrestling) பெண்களுக்கான 50 கிலோ கிராம் எடைப் பிரிவில் இலங்கை வீராங்கனை நிபுணி வாசனா தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இறுதிப் போட்டியில், டொன் தி கிம் ஓன்ஹ் என்ற வியட்நாம் வீராங்கனையை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்ததன் மூலம் நிபுணி வாசனா இந்த முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இந்த வெற்றி, இலங்கைக்கு சர்வதேச விளையாட்டுத் துறையில் பெருமை சேர்த்துள்ளதுடன், மற்போர் விளையாட்டில் பெண்கள் சாதனைகளுக்கு புதிய ஊக்கத்தை வழங்கும் என விளையாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
