2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண மாற்றத்தை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒருமித்த முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, புதிய மின்கட்டண அமைப்பு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும். இதற்கு முன், சுமார் 13.56% கட்டண உயர்வை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அலகுகளின் அடிப்படையில் படிப்படியாக கட்டண உயர்வை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண மாற்றங்கள்:
- 0 – 30 அலகுகள்: 4.3% உயர்வு (சுமார் ரூ. 15 அதிகரிப்பு)
- 31 – 60 அலகுகள்: 6.9% உயர்வு (சுமார் ரூ. 45 அதிகரிப்பு)
- 61 – 90 அலகுகள்: 6.9% உயர்வு (சுமார் ரூ. 120 அதிகரிப்பு)
- 91 – 120 அலகுகள்: 7.1% உயர்வு (சுமார் ரூ. 420 அதிகரிப்பு)
- 180 அலகுகள் மேல்: 25% வரை அதிகரிப்பு
மேலும், மதஸ்தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. மாதாந்த மின்சார பயன்பாடு 180 அலகுகளுக்கு குறைவாக இருந்தால், கட்டண உயர்வு அமுல்படுத்தப்படாது. ஆனால் 180 அலகுகளை மீறும் பயன்பாட்டுக்கு 9.6% உயர்வு நடைமுறைக்கு வரும்.
இந்த மாற்றங்கள் மூலம் மின்சாரச் செலவினங்களை சமநிலைப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
