லெபனானில் ஏவுகணை தாக்குதல் – ஐநா வீரர் உயிரிழப்பு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

லெபனானில் ஏவுகணை தாக்குதல் – ஐநா வீரர் உயிரிழப்பு




லெபனான்வில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அமைதிப்படை முகாம்களில் ஒன்றிற்கு எதிராக நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், ஒரு அமைதிப்படை வீரர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில், இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த ஐநா அமைதிப்படை உறுப்பினரொருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த வீரர்கள் தங்கியிருந்த பகுதிக்கு அருகில் இடம்பெற்ற ஏவுகணை தாக்குதலின் விளைவாகவே இந்த இழப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த அமைதிப்படை வீரருக்கு மரியாதை செலுத்திய இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு, சர்வதேச அமைதியை நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர் உயிரிழந்தது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தை இந்தோனேசியா கடுமையாக கண்டித்து, சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.