உயர்தரப் பரீட்சையில் முதல் இடம் – கிளிநொச்சி மாணவன் சாதனை




2025 (2026) ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தை கிளிநொச்சியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் பெற்றுள்ளார்.

தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற மாணவன், இயற்பியல் அறிவியல் (Physical Science) பாடப்பிரிவில் 3A பெறுபேறுகளைப் பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அவர் அகில இலங்கை அளவிலும், தனது மாவட்ட அளவிலும் அதிகபட்ச புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனை, வட மாகாண மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.