படப்பொலை, வதுரவில பகுதியில், போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிளுடன் பயணித்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், குறித்த நபரிடமிருந்து 9 மில்லிமீட்டர் ரகத்தைச் சேர்ந்த 9 தோட்டாக்கள் மற்றும் 1 கிராம் 800 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் வதுரவில பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
