டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தொடர்பான போர் சூழ்நிலையை முன்னிட்டு, சீனா நோக்கி மேற்கொள்ளவிருந்த தனது முக்கிய பயணத்தை சுமார் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“போரின் நிலைமையை நேரடியாகக் கண்காணிப்பது அவசியம்” என அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
ஷி ஜின்பிங் உடனான இந்த சந்திப்பு மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறவிருந்தது. இரு நாடுகளுக்குமிடையிலான முதலீடுகள், வர்த்தக தீர்வைகள் மற்றும் பொருளாதாரத் தடைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருந்தன.
மேலும், அமெரிக்கா – சீனா பிரதிநிதிகள் அண்மையில் பாரிஸ் நகரில் சந்தித்து இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
