வெள்ளை மாளிகை, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிறுவனங்களைப் பாதுகாக்க அமெரிக்கா இராணுவம் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) ஏப்ரல் 1 முதல் அந்தப் பகுதியில் அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தலாம் என எச்சரித்ததாக சர்வதேச தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில், ஈரான் மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு தாக்குதலையும் தடுக்க அமெரிக்க இராணுவம் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் கடந்த காலத்தை ஒப்பிடுகையில் சுமார் 90% வரை குறைக்கப்பட்டுள்ளன என்பதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஈரானின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொண்டு கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
