வெல்லவாய விபத்து – 7 வயது சிறுவன் உயிரிழப்பு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வெல்லவாய விபத்து – 7 வயது சிறுவன் உயிரிழப்பு




தனமல்வில – வெல்லவாய பிரதான வீதியில், குடாஓய நகருக்கு அருகில் கடந்த (28) இடம்பெற்ற விபத்தில் 7 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லவாய பகுதியில் இருந்து தனமல்வில நோக்கி பயணித்த லொறி ஒன்று, எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நேரத்தில் முச்சக்கர வண்டியின் பின்புற இருக்கையில் இருந்த சிறுவன் கடுமையாக காயமடைந்துள்ளார். அவர் முதலில் தனமல்வில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கொட்டியாகல பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக லொறி ஓட்டுநரை குடாஓய பொலிஸார் கைது செய்துள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.