வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்று (18) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பதிவாகும் வாய்ப்பு உள்ளது.
மேலும், கிழக்குக் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். அதேசமயம் மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களுடன் காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும்.
