2025ல் இலங்கை பொருளாதாரம் 5% வளர்ச்சி – அதிகாரப்பூர்வ அறிக்கை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

2025ல் இலங்கை பொருளாதாரம் 5% வளர்ச்சி – அதிகாரப்பூர்வ அறிக்கை

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5.0% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

2015 நிலையான விலைகளை அடிப்படையாகக் கொண்டு:

  • 2024: ரூ. 12,508,954 மில்லியன்

  • 2025: ரூ. 13,128,577 மில்லியன்

என உயர்வு காணப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் வளர்ச்சி:

  • விவசாயம்: 1.4%

  • கைத்தொழில்: 7.8%

  • சேவைகள்: 3.3%

மேலும், 2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் (Q4) பொருளாதாரம் 4.8% வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இது ஆண்டின் இறுதியில் பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட்டதைக் காட்டுவதாகவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.