மஹியங்கனையில் விபத்து – தம்பதியினர் உயிரிழப்பு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மஹியங்கனையில் விபத்து – தம்பதியினர் உயிரிழப்பு




மஹியங்கனை – கிராந்துருகோட்டே பிரதான வீதியின் 3ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (27) இரவு இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கிராந்துருகோட்டே நோக்கி பயணித்த கெப் வாகனம் ஒன்று, முன்புறம் சென்ற மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி, கெப் வாகன ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்தவர்களில் 7 பேர் உள்ளிட்ட மொத்தம் 9 பேர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரு பெண்ணும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 57 மற்றும் 44 வயதுடைய தம்பதியினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மஹியங்கனை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.