பஞ்சிகாவத்தை பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புறக்கோட்டை பொலிஸ் நிலையம்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் பஞ்சிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து சுமார் 710 கிராம் 603 மில்லிகிராம் ‘ஐஸ்’ (Crystal Meth), 934 கிராம் 575 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 300 கிராம் 575 மில்லிகிராம் ‘ஹேஷ்’ போன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், 300 போதை மாத்திரைகள், ஒரு மின்னணு தராசு, பணம் எண்ணும் இயந்திரம், போதைப்பொருள் விற்பனையால் சம்பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் ரூபாய் 8,59,730 பணம் மற்றும் 06 கைப்பேசிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர் இன்று (28) மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
