நாவற்குழியில் பிக்கு கைது – சிறுமி துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

நாவற்குழியில் பிக்கு கைது – சிறுமி துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு




யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றின் இளநிலை பிக்கு, சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி ஒருவர், நேற்று (29) விகாரை வளாகத்திற்கு குடிநீர் பெறச் சென்றபோது, அங்கு சமீபத்தில் வந்திருந்த இளநிலை பிக்கு அவரை தவறாக நடத்தினார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சம்பந்தப்பட்ட பிக்குவை கைது செய்து இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தினர்.

இதன் பேரில், குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.