இந்த மாதம் எரிபொருள் விலை மாற்றம் இல்லை




மாதாந்திரமாக மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இந்த மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் இந்த தகவலை வெளியிட்டார். உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைகளின் மாற்றங்களை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் விலை திருத்தம் செய்யப்படுவது குறித்து அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனுடன், தற்போது செயல்பாட்டில் உள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு முறைமை இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.