சாதாரண தர பரீட்சை குறித்த முக்கிய தகவல்.... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

சாதாரண தர பரீட்சை குறித்த முக்கிய தகவல்....




கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாக உள்ளது. நாளைய தினம் முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் முதல் கட்ட பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இந்த தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 10-ம் திகதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பிரயோக பரீட்சைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 30-ஆம் திகதி வரையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாதாரண பரீட்சை பெறுவேறுகளை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் எதிர்பார்க்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.