கட்டுநாயக்காவில் கனடா தம்பதி கைது.... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கட்டுநாயக்காவில் கனடா தம்பதி கைது....




கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால், இரண்டு வெளிநாட்டு பயணிகள் கைது செய்யப்பட்டனர். நேற்று காலை, 320.159 மில்லியன் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வர முயன்ற போது இந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் கனடாவின் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்தவர்களாகும். அவர்களில் 25 வயதுடைய ஆண் அங்குள்ள ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிவதாக தெரியவந்துள்ளது. 

அவரது 29 வயது மனைவி இன்னும் வேலை தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் நேற்று காலை 10.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர்கள் வந்திருந்தனர். 02 சூட்கேஸ்களில் 23 பக்கட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 கிலோகிராம் 159 கிராம் குஷ் என்ற போதைப்பொருளை அவர்கள் கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணைக்காக இருவரையும் அவர்கள் கொண்டு வந்த போதைப்பொருள் கையிருப்பையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.