இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் பாதுகாப்பு தலைமை அதிகாரி அலி லரிஜானி கொல்லப்பட்டார்....

ஈரான் உறுதிப்படுத்தியதன்படி, அலி லரிஜானி, இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில், அவரது மரணம் உறுதிப்படுத்தப்பட்டதுடன், நாட்டிற்காக அவர் செய்த சேவைகளும் பாராட்டப்பட்டுள்ளன.

முன்னதாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சும் இந்தத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அறிவித்திருந்தது.

அலி லரிஜானி, ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளராகவும், முக்கிய பாதுகாப்பு தீர்மானங்களை எடுத்த முக்கிய நபராகவும் விளங்கியதால், அவரது மரணம் தற்போதைய போர்ச் சூழலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் 2025 ஆகஸ்ட் மாதம் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதுடன், அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட உயர்மட்ட தலைமைகளின் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.