போர் பதற்றம்: உலக அரசியலில் திருகோணமலை, இலங்கை முக்கிய மையமா? - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

போர் பதற்றம்: உலக அரசியலில் திருகோணமலை, இலங்கை முக்கிய மையமா?

 


மத்திய கிழக்கின் போர் களத்தில் இலங்கை தெரிந்தோ தெரியாமலோ நுழைந்து விட்டது என்றே கூறலாம். தற்போது போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அரபு நாடுகள் மீது இனி தாக்குதல்கள் நடத்தப்படாது என ஈரான் ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஆனாலும் அமெரிக்க இராணுவதளங்கள் ஆபத்துநிலையில் உள்ளதால் அவை இலங்கைக்கு நகர்த்தப்படுமா என்ற கேள்வி அதிகரித்துள்ளது.

 இலங்கையின் பூகோள அமைவிடம் தொடரபில் அமெரிக்கா ஆரம்பத்திலிருந்தே அவதானமாக உள்ளது. மேலும் திருகோணமலை மீது நீண்ட பார்வையையும் வைத்துள்ளது. ட்ரம்ப் நினைத்தால் எதனையும் செய்வார் என்ற நிலையில் அமெரிக்காவின் இராணுவதளம் திருகோணமலையில் அமைக்கப்படலாம். அதனை நிராகரிக்க முயன்றால் வெனிசுலாவின் நிலை இலங்கைக்கும் ஏற்படலாம். இலங்கையிலுள்ள ஈரானிய கப்பல் தற்போதைய ஆட்சி மாறும் வரை அங்கேயே இருக்கட்டும் என்று மொசாட்டும் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளது.