கொத்மலை நீர்த்தேக்க நீர்மட்டம் 21.8% ஆக சரிவு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்க நீர்மட்டம் 21.8% ஆக சரிவு




தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக கொத்மலை நீர்த்தேக்கம் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது.

நேற்று (30) காலை 6.00 மணி நிலவரப்படி, அந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 21.8% வரை தாழ்ந்துள்ளதாக அதற்குப் பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார். முழுமையான கொள்ளளவு சுமார் 37.276 மில்லியன் கன மீட்டர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தற்போது நீர்த்தேக்கத்தில் உள்ள நீர், மின் உற்பத்தி தேவைக்காக நீர் கட்டுப்பாட்டு செயலகம் வழியாக கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெளியிடப்படுகின்றது.

இதற்கிடையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கம் நீர்மட்டமும் இதே வறட்சியான வானிலை காரணமாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.