அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு மையத் தலைவர் இராஜினாமா – ஈரான் போர் குறித்த அதிர்ச்சி குற்றச்சாட்டுகள்

ஜோசப் கென்ட், அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் பணிப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு அனுப்பிய இராஜினாமா கடிதத்தில், ஈரான் தொடர்பான போர் சூழ்நிலையின் பின்னணியில் “சதித் திட்டம்” உள்ளதாகக் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கென்ட் குற்றச்சாட்டு:

  • அமெரிக்காவை போர் நோக்கி தள்ளும் வகையில் தவறான தகவல் பரப்பப்பட்டது

  • சில இஸ்ரேல் உயர் அதிகாரிகள் மற்றும் ஊடக செல்வாக்கு குழுக்கள் இணைந்து செயல்பட்டதாக குற்றச்சாட்டு

  • “America First” கொள்கை தளர்த்தப்பட்டதாக சுட்டிக்கை

மேலும், ஈரானிடமிருந்து உடனடி அச்சுறுத்தல் உள்ளது என்ற தவறான தகவலால் டொனால்ட் ட்ரம்ப் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜோசப் கென்ட், அமெரிக்க விசேட படையணி மற்றும் சி.ஐ.ஏ அனுபவம் கொண்ட அதிகாரி ஆவார். அவரது மனைவி ஷானன் கென்ட், 2019 ஆம் ஆண்டு சிரியாவில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.