பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலங்கை விமான சேவை மீண்டும் ஆரம்பம்.. - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலங்கை விமான சேவை மீண்டும் ஆரம்பம்..

பிரிட்டிஷ் ஏர்வேஸ், வரவிருக்கும் குளிர்காலத்தை முன்னிட்டு இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, 2026 ஒக்டோபர் 23 முதல் லண்டன் கெட்விக் விமான நிலையம் இலிருந்து இலங்கை நோக்கி வாரத்திற்கு மூன்று முறை நேரடி விமான சேவைகள் இயக்கப்படவுள்ளன.

இந்த புதிய சேவைகளுக்கான பயணச்சீட்டு விற்பனை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இலங்கையிலிருந்து லண்டன் நோக்கி நேரடி விமான சேவைகளை இயக்கி வரும் ஒரே நிறுவனம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கை, சுற்றுலா மற்றும் சர்வதேச பயணத் தொடர்புகளை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.