தற்போதைய எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்தில் கொண்டு, இன்று (18) முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்ததன்படி, இந்த விடுமுறை:
-
பாடசாலைகள்
-
பல்கலைக்கழகங்கள்
-
நீதித்துறைஇவற்றிற்கும் பொருந்தும்.
மேலும், அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புகளும் இன்றைய தினம் நடத்தப்படாதிருக்க கோரப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள்:
-
சுகாதாரம்
-
துறைமுகம்
-
நீர் வழங்கல்
-
மின்சாரம்இவற்றிற்கு இந்த விடுமுறை பொருந்தாது.
-
பிரதான மார்க்கம் – 29 பயணங்கள்
-
வடக்கு மார்க்கம் – 17
-
கடலோர மார்க்கம் – 33
-
களனிவெளி – 5
-
புத்தளம் – 9
-
மட்டக்களப்பு & திருகோணமலை – 6
இதற்கிடையில், இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) வழக்கம்போல பேருந்துகளை இயக்கும் என்றும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.