சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இந்த போராட்டம் ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமை பாதுகாப்பு மேம்பாட்டு அமைப்பு ஏற்பாட்டில் நல்லூர் பின்வீதியில் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் பெருமளவிலான பெண்கள் கலந்து கொண்டு, பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பங்கேற்பாளர்கள் “தமிழினத்தின் முன்னேற்றமே விடுதலையின் அடிப்படை”, “இராணுவம் வெளியேற வேண்டும்”, “போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்” போன்ற கோஷங்களை எழுப்பியதுடன், அவற்றை பிரதிபலிக்கும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்த போராட்டத்தின் மூலம் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு போன்ற முக்கிய சமூக பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
