பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை – இஸ்ரேல் சட்டம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை – இஸ்ரேல் சட்டம்




இஸ்ரேல் பாராளுமன்றம், உயிரிழப்புகளை ஏற்படுத்தும் தாக்குதல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படும் பாலஸ்தீனர்களுக்கு இராணுவ நீதிமன்றங்கள் மூலம் மரண தண்டனை விதிக்க அனுமதிக்கும் சட்டமூலத்தை நேற்று (30) நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்டம், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னதாக தீவிர வலதுசாரி அரசியல் தரப்புகளுக்கு அளித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்றும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சட்டம் தொடர்பாக மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் எதிர்வினைகள் உருவாகக்கூடும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.