குவைத் தகவல்களின் படி, டுபாய் துறைமுகம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலால் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், தாக்குதல் நடந்த நேரத்தில் கப்பல் முழுமையாக எண்ணெயால் நிரப்பப்பட்டிருந்ததால் தீப்பரவல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும், கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக கடல்சார் பாதுகாப்பு மீதான கவலை மேலும் அதிகரித்துள்ளது.
