ஆசியாவில் எரிபொருள் விலை உயர்வு எச்சரிக்கை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஆசியாவில் எரிபொருள் விலை உயர்வு எச்சரிக்கை




ஆசிய பிராந்தியத்தில் எதிர்வரும் மாதங்களில் பெட்ரோல், டீசல் என்பவற்றின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவூதி அரம்கோ, ஏப்ரல் மாதத்திற்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை ஆசிய நாடுகளுக்குக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்களால் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 தொடர்ந்து இரண்டாவது மாதமாக சவூதி அரம்கோ இந்த விநியோகக் கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த முடிவினால் ஆசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கிடைக்கும் கச்சா எண்ணெயின் அளவு குறையும். இதன் விளைவாக, சந்தைக்கு விநியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் (பெட்ரோல், டீசல் போன்றவை) அளவும் குறையக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விநியோகக் குறைப்பு, எதிர்வரும் மாதங்களில் ஆசிய பிராந்தியத்தில் எரிபொருள் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.